தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் ஹரி படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதேசமயம், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் இதுவரை அவர் இயக்கிய படங்களில் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடியன்கள் இடம்பெற்று வந்தநிலையில், தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கியுள்ள சிங்கம்-3 படத்தில் சூரியை மெயின் காமெடியனாக நடிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் சூரியின் காமெடி ட்ராக்கில் அவருடன் நளினி, ரோபோ சங்கர், போண்டமணி, இமான் அண்ணாச்சி, ஷாம்ஸ் என பலர் கூட்டு சேர்ந்துள்ளனர். இதற்கு முன்பு ஹரி படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை மிஞ்சி விட வேண்டும் என்று செம கலக்கல் செய்திருக்கிறாராம் சூரி. அதோடு, இதற்கு முன்பு சூர்யாவுடன் அவர் நடித்த அஞ்சான் படத்தைவிட இந்த படத்தில் சூரியின் காமெடி காட்சிகள் தனி முத்திரை பதிக்குமாம். அதனால் தனது நட்பு வட்டாரங்களில், சிங்கம்-3 வரட்டும் என் காமெடியோட வேல்யூ தெரியும் என்று சொல்லி மீசையை முறுக்கி விட்டு வருகிறார் சூரி.