வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாகன், அவன் இவன், தெகிடி படங்களில் நடித்த ஜனனி அய்யர், அதன்பிறகு தமிழ் படவாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்துக்கு இடம்பெயர்ந்தார். போன வேகத்திலேயே ஐந்து படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டவர் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வருகிறார். இந்தநேரத்தில் தமிழில் இருந்து சில படவாய்ப்புகள் கிடைத்ததால் தற்போது, தொலைக்காட்சி, அதே கண்கள், பலூன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஆரம்பத்தில் தனது பெயருடன் அய்யர் என்பதை அவர் இணைத்திருப்பதற்கு சிலர் விமர்சித்தபோதும், அதைக்கண்டு கலங்காமல் இப்போதுவரை அவர் ஜனனி அய்யராகவே நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த டூரிங் டாக்கீஸ், சாயா உள்பட சில படங்களில் நடித்துள்ள காயத்ரியும் தனது பெயருடன் அய்யரை சேர்த்து காயத்ரி அய்யராகி விட்டார். இதற்கு முக்கிய காரணம், காயத்ரி என்ற பெயரில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட சில படங்களில் நடித்த காயத்ரி உள்பட மேலும் சில நடிகைகளும் பீல்டில் இருப்பதால், ஒரே பெயரினால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் இப்படி காயத்ரியுடன் அய்யரை இணைத்துள்ளாராம் அவர்.