ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கௌதம் மேனன் படங்களில் எல்லாம் கதாநாயகிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. அதனால் அவரது படங்களில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் அனைவருமே ஆவலாக இருப்பார்கள் தான். ஆனால் கதைக்கு தேவைப்பாட்டால் மட்டுமே அவர்களை அழைக்கும் கௌதம், மற்றபடி புதிய நாயகிகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை சரியாக செய்து வருகிறார். அந்தவகையில் சிம்பு படத்தில் மலையாள திரையுலகில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்த மஞ்சிமா மோகனை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அடுத்ததாக தனுஷ் படத்தில் சென்னை பெண்ணான மேகா ஆகாஷை கதாநாயகி ஆக்கினார்..
இப்போது விக்ரமை வைத்து இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க மலையாளத்தில் நிவின்பாலியுடன் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற ஒரே படத்தில் நடித்த அனு இம்மானுவேலை இழுத்து வந்திருக்கிறார். ஆனால் கதாநாயகியாக அல்ல, மிக முக்கியமான இன்னொரு கேரக்டரில் நடிக்க வைக்க. சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'சொப்ன சஞ்சாரி' படத்தில் ஜெயராமின் மகளாக, பள்ளி செல்லும் மாணவியாக நடித்த இந்த அனு இம்மானுவேல், மலையாள தயாரிப்பாளரான தங்கச்சன் இம்மானுவேலின் மகள்.
அதன்பின்தான் நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவரை, படத்தின் முதல் ஷெட்யூல் முடியும் முன்னரே அந்த கேரக்டருக்கு செட்டாகவில்லை என விலக்கி விட்டார்கள். இதற்கிடையே தெலுங்கில் 'மஞ்சு' படத்தில் இவர் நடிப்பை பார்த்துவிட்டுத்தான் தனது படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம் கௌதம் மேனன்.. ஆனால் அதற்கு முன்பே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.