ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மலையாளத்தில் வெளியாகி நூறு நாட்களை கடந்த 'ஒப்பம்' படம் மோகன்லால் மற்றும் அவரது திக் பிரண்ட் ஆன பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான படைப்பு. அதனாலேயே ரிலீஸுக்கு முன்பாக கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் எழுந்தது. படத்தின் ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ஆம்.. இந்தப்படத்தின் மிக நேர்த்தியான ட்ரெய்லரை 'பிரேமம்' புகழ் அல்போன்ஸ் புத்ரன் தான் உருவாக்கினார். தியேட்டருக்கு இவ்வளவு பார்வையாளர்களை வரவழைக்க அந்த ட்ரெய்லரும் முக்கிய காரணம்.. அப்போதே அல்போன்ஸ் புத்ரனுக்கு தனது நன்றியை தெரிவித்தார் மோகன்லால்.
இப்போது சமீபத்தில் இந்தப்படத்தின் 101வது நாள் விழா கொச்சியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அல்போன்ஸ் புத்ரனையும் அழைத்திருந்தார் இயக்குனர் பிரியதர்ஷன்.. விழா மேடையில் பேசிய மோகன்லால், “இந்தப்படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் அல்போன்ஸ் புத்ரனும் ஒருவர்.. அவர்தான் இந்த படைப்பை ரசிகர்களுக்கு முதன்முதலாக 'ட்ரெய்லர்' மூலம் அறிமுகப்படுத்தியவர்” என கூறி கீழே அமர்ந்திருந்த அல்போன்ஸ் புத்ரனை மேடைக்கு வரவழைத்து கௌரவப்படுத்தியதோடு தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.