நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இளையராஜா - வைரமுத்து இணைந்திருந்த காலம் தமிழ்த் திரையிசை உலகில் ஒரு பொற்காலம் என்பதை அனைத்து இசை ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு படத்திற்கு பாடல்களுக்காக டியூன்கள் உருவாக்குவதை இளையராஜா ஒரே நாளில் முடித்த சம்பவங்கள் உண்டு. ஹார்மோனியத்தைத் தொட்டால் அவர் டியூனை முடிக்காமல் எழுந்ததாக வரலாறே கிடையாது என வைரமுத்து பாராட்டியுள்ளார்.
அமீர் இயக்கத்தில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதி மற்றும் பலர் நடிக்கும் 'சந்தனத் தேவன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
வைரமுத்து பேசும் போது, “திரையுலகத்திற்கு வரும் போதே இரு மடங்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். ஆனால், இன்றோ பலரிடம் அப்படி ஒரு எண்ணமில்லை.
சிலர் 3 நாள் ஓடும் படத்திற்கு 300 நாட்கள் இசையமைக்கிறார்கள். நானும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய 'சிந்து பைரவி, காதல் ஓவியம்' போன்ற படங்களின் பாடல்களை 5 நாள், ஒரு வாரத்தில் இசையமைத்து எழுதி முடித்தோம். 'காதல் ஓவியம்' படத்திற்காக 7 பாடல்களுக்கான இசையயை ஒரே நாளில் அமைத்தார் இளையராஜா.
நமக்கு வாய்ப்புகள் இருக்கும் போதே நாம் கடுமையாக உழைக்க வேண்டும். யுவன் முன்பைப் போல் இல்லை, இப்போது மிகவும் மாறிவிட்டார். முன்பெல்லாம் போன் செய்தால் மறுநாள்தான் எடுப்பார். இப்போது அப்படியில்லை. யுவன் உங்கள் திறமை எனக்குத் தெரியும். கடுமையாக உழையுங்கள். வாய்ப்புகள் இருக்கும் போதே அதற்கேற்றபடி உழைத்தால் நாம் வேறு ஒரு கட்டத்திற்குச் செல்வோம்,” என்றார் வைரமுத்து.
யுவன், வைரமுத்து கூட்டணி இந்த ஆண்டில் நான்கு படங்களில் சேர்ந்து பணியாற்றப் போகிறார்களாம். இது வைரமுத்து சொன்ன கூடுதல் தகவல்.