இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினியின் படத்தலைப்புகளை ஹீரோக்கள் மட்டும்தான் மீண்டும் பயன்படுத்த முடியுமா? ஹீரோயின் பயன்படுத்தினால் என்னவாம் என்பதுபோல், த்ரிஷாவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ஒன்றுக்கு 'கர்ஜனை' என்று பெயர் சூட்டியுள்ளனர். சமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா, கர்ஜனை என்ற தலைப்புக்கு ஏற்ப, அதிரடியான ஆக்ஷனுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரில் நடிக்கிறார்.
சுந்தர் பாலு இயக்கி வரும் இந்தப்படம் ஹிந்தியில் வெளியான 'NH-10' படத்தின் ரீ-மேக் என்று முதலில் சொல்லப்பட்டது. இந்த தகவல்களை தற்போது 'கர்ஜனை' படக்குழுவினர் மறுத்துள்ளனர். 'கர்ஜனை' படத்தின் கதை கற்பனை கதை இல்லையாம். வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதால் தனக்கு போதிய பயிற்சி வேண்டும் என்றும் சொன்னாராம் த்ரிஷா. அதன்படி 'கோலிசோடா', 'பத்து எண்றதுக்குள்ள' போன்ற படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த சுப்ரீம் சுந்தரிடம், த்ரிஷா சண்டை பயிற்சி எடுக்க ஏற்பாடு செய்துள்ளாராம் இயக்குநர்.
சமீபத்தில் வெளியான 'கொடி' படத்தில் த்ரிஷா நெகட்டிவ்வான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதைப்போலவே கர்ஜனை படத்தில் தன்னுடைய கேரக்டரும் அமையும் என்று சொல்கிறாராம் த்ரிஷா. 'கர்ஜனை' படத்தில் விஜய்டிவி சீரியல் நடிகர் அமித் பார்கவ் த்ரிஷாவின் பாய் ஃப்ரெண்டாக நடிக்கிறார்.