நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஜல்லிக்கட்டிற்கு எதிராக போராடும் பீட்டா, சிக்கன் 65, ஆம்லேட் போன்றவற்றுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டு கிடக்கிறது. இந்தாண்டாவது நடைபெறுமா...? என்று கடைசி நிமிட வரை தமிழர்கள் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதோடு போராட்டங்களும் நடந்து வருகிறது. திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குநர் ராஜேஷ்.எம், பீட்டா அமைப்பிற்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... "பீட்டா ஏன் சிக்கன் 65, மட்டன் பாயா, மீன் வறுவல், பீப் கறி மற்றும் ஆம்லேட்டுக்கு எதிராக ஏன் போராடவில்லை?" என்று கேட்டுள்ளார்.
ராஜேஷின் இந்த கருத்தை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.