வரதட்சனை கொடுமை வழக்கு: கோர்ட்டில் ஆஜராக ரம்பாவுக்கு சம்மன் - Court summon to Actress Rambha
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரதட்சனை கொடுமை வழக்கு: கோர்ட்டில் ஆஜராக ரம்பாவுக்கு சம்மன்

13 ஜன, 2017 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Court-summon-to-Actress-Rambha

நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, விஐபி, அருணாச்சலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார்.


இந்த நிலையில் ரம்பாவின் அண்ணன் வாசுவின் மனைவி பல்லவி தனது கணவர் வாசு, மற்றும் நடிகை ரம்பா மீது ஐதராபாத் நீதிமன்றத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் வாசுவும், ரம்பாவும் கொடுமைப்படுத்தியதாக தனது வழக்கில் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படியும், கோர்ட்டில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் ரம்பாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ரம்பா கனடாவில் இருந்தால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்த வழக்கில் அண்ணன் வாசு ஆஜராகி வந்தார். இந்த நிலையில் ரம்பா இந்தியா வந்திருப்பதாக போலீசுக்கு பல்லவி தகவல் கொடுத்தார். இதனால் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரம்பாவுக்கு ஐதராபாத் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


ரம்பா, தற்போது ஐதராபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் இந்தியா வந்துவிட்ட ரம்பா, கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: திரையுலகம் சார்பில் ஓர் ஆண்டு கொண்டாடப்படுகிறதுஎம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: ... வரிவடிவில் பைரவா பாடல்கள் வரிவடிவில் பைரவா பாடல்கள்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film manik
    • மாணிக்
    • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
    • நடிகை : சூசா குமார்
    • இயக்குனர் :மார்ட்டின்
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in