Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“என் தவறுகளை பொறுத்துக்கொண்டதற்கு மோகன்லாலுக்கு நன்றி” ; பிரகாஷ்ராஜ்..!

12 ஜன, 2017 - 18:03 IST
எழுத்தின் அளவு:
Prakash-raj-thanks-to-Mohanlal

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'ஒப்பம்' படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது.. இன்னும் கூட சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தப்படத்தில் பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார். இருந்தாலும் இந்தப்படம் ஆக்சன் க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சுமார் நூறு கோடி ரூபாய் வசூலையும் நெருங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் 101வது நாள் விழாவை கொண்டாடினார்கள்.


கொச்சியில் நடைபெற்ற இந்தவிழாவில் பிரியதர்ஷன், மோகன்லாலுடன் சிறப்பு விருந்தினராக பிரகாஷ்ராஜும் கலந்துகொண்டார். தனக்கு 'காஞ்சிவரம்' படம் மூலம் தேசிய விருது வாங்கித்தந்தவரும் தற்போது அவரை வைத்து சில சமயங்களில் என்கிற படத்தையும் இயக்கிவரும் என்பதால் பிரியதர்ஷன் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். விழாவில் பேசும்போது உலகில் உள்ள தலை சிறந்த நடிகர்களில் மோகன்லாலும் ஒருவர் என பாராட்டினார்.


இருபது வருடங்களுக்கு முன் மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்த 'இருவர்' பட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட பிரகாஷ்ராஜ், “அப்போது நான் அறிமுகமாகியிருந்த நேரம்.. அவரோ இருபது வருட அனுபவத்துடன் சூப்பர்ஸ்டாராக இருந்தார். அந்தப்படத்தில் நான் ஒரு காட்சியில் இருபது டேக்குகள் வரை வாங்கினேன்.. ஆனால் ஒரே டேக்கில் ஒகே செய்த மோகன்லால் என்னுடைய அத்தனை தவறுகளையும் பெருந்தன்மையுடன் பொறுத்துக்கொண்டார். அங்கிருந்து கற்றுக்கொண்டுதான் நான் இப்போது சொல்லிக்கொள்ளும்படியான நடிகனாகி இருக்கிறேன். அதற்காக நான் மோகன்லாலுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார் பிரகாஷ்ராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in