ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகர்கள் அர்ஷத் வர்சி, நஸ்ரூதின் ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரயிருக்கும் படம் ‛இராடா. திவ்யா தத்தா, மற்றும் ஷரத் கேல்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபர்ணா சிங் இயக்கியுள்ளார். பல்குனி பட்டேல் மற்றும் பிரின்ஸ் சோனி ஆகியேர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர் .‛இராடா படம் சமூகத்தை சார்ந்த விஷயத்தை பேசும் படமாக அமைந்து இருக்கிறது. இராடா படத்திற்கு பல எதிர்ப்புகள் உருவாகி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன் ‛இராடா படம், நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கத்தில் உருவாகி ‛ஜாலி எல்.எல்.பி 2' படத்துடன் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது ‛இராடா படத்தின் வெளியிட்டு தேதி ஒருவாரம் தள்ளிபோய் உள்ளது. அதன்படி ‛இராடா படம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.