ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛சொப்பன சுந்தரி நான் தானே...' என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் வெளியான ‛வீர சிவாஜி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே பார்வை கிடையாது. இருந்தாலும் தனது இசையால் ரசிகர்களை மகிழ்த்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கும் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மார்ச் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சந்தோஷத்துடன் வைக்கம் விஜயலட்சுமிக்கு மற்றுமொரு மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைத்துள்ளது. அது அவரது பார்வை தான். கடந்த சில ஆண்டுகளாக தனது கண் பார்வைக்காக தீவிர சிகிச்சை எடுத்து வந்த விஜயலட்சுமிக்கு சிகிச்சையின் பலனால் தற்போது பார்வை கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் வைக்கம் விஜயலட்சுமி.