Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழனின் பண்பாடு, கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள் - ஜல்லிக்கட்டு குறித்து பாரதிராஜா கோபம்

12 ஜன, 2017 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-angry-about-Jallikattu

அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்திய முழுவதும் சைவ உணவுதான் - அசைவத்திற்கு தடை விதியுங்கள். இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள் என்று பாரதிராஜா தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாகவே தடைபட்டு இருக்கிறது. ஒவ்வொரு பொங்கல் நெருங்கும்போது ஜல்லிக்கட்டுக்கான ஆதரவும், அது தொடர்பான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தமிழகம் முழுக்க நடைபெற்று கொண்டு இருக்கிறது. நடிகர்கள் கமல், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் பலர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதோடு, தன் கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...


4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டை தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் தான் இறந்து போய் இருக்கிறார்கள் என்ற செய்தி இருக்கிறது. இப்படியிருக்க, இதை மிருக வதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம்.


ஜல்லிக்கட்டு மிருகவதையென்றால் தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு அடிமாடுகளாய் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடியுமா?, கோயில்களில் காட்சிப் பொருளாய், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?, பறவைகளையும் விலங்குகளையும் சிறைப்பிடித்து அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருகக்காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா?


குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?, தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா?, காவல் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாயக்ளை விடுவிக்க முடியுமா?


ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்திய முழுவதும் சைவ உணவுதான் - அசைவத்திற்கு தடை விதியுங்கள். இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள். இது ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தேளா? என்ற போட்டியே தவிர, மிருக வதைக்கான இடமே இல்லை.


ஜல்லிக்கட்டுக்கு தடையென்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினை போட காளைகள் இல்லாமல், நம் பசு மாடுகளுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதிலிருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது. நம் கண்முன்னே பண்பாட்டு, பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாமென்று மாடுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தை கழட்டி விடுங்கள். எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கனாங்கயிற்றை அவிழ்த்து விடுங்கள். எங்கள் வாடி வாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் அழியாதிருக்கட்டும்.


ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டு கலாச்சாரத்தின் அடி மடியிலேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதற்கு மாநில அரசு கைகட்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பதும் தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும். உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறைகேடுகளாலும் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள்.


அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை. இதனை இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in