ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஷாரூக் கானும் ஒருவர். இயக்குநநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ‛ரயீஸ்' படத்தில் கள்ளாச்சாராயம் விற்கும் தாதாவாக நடித்துள்ளார் ஷாரூக்.ஷாரூக் மற்றும் எக்செல் என்டெர்டெயிண்மென்ட் இணைந்து ‛ரயீஸ்' படத்தை தயாரித்துள்ளனர் .இந்தப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் வட மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் ஷாரூக்கானும் தனது வீட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் பட்டம்விட்டு மகிழ்ந்தார். பட்டமிடும் விழாவில் தனது நடிப்பில் உருவாகி வெளியாகயிருக்கும் ‛ரயீஸ்'படத்திற்காக புரொமோஷனும் செய்தார். ‛ரயீஸ்' படத்திலும் ஷாரூக்கான் பட்டம் விடுவது போன்ற காட்சிகள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.