டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழிலும் மலையாளத்திலும் சின்னதும் பெரிதுமான கேரக்டர்களில் நடித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார் இனியா. கடந்த வருடம் மலையாளத்தில் மட்டும் நான்கு படங்களில் நடித்தார் இனியா. அதில் பிஜுமேனனுக்கு ஜோடியாக, படத்தின் கதாநாயகியாகவே நடித்த 'ஸ்வர்ண கடுவா' என்கிற படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டாலும் படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.. அதில் இனியாவுக்கு நிறைய வருத்தமே..
ஆனால் இந்த வருடம் மலையாள சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக இனியா நினைக்கிறாராம். காரணம் தற்போது மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்து வரும் 'புத்தன் பணம்' படம் தான்.. பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கிவரும் இந்தப்படத்தில் கதாநாயகி இவர் அல்ல என்றாலும் மிக முக்கியமான கேரக்டராம். சுந்தரி என்கிற தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறாராம். படத்தின் கதையும் தமிழக-கேரளா எல்லையில் நிகழ்வதைப்போல அமைக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர இன்னும் இரண்டு மலையாள படங்களிலும், தமிழில் பொட்டு, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் இனியா.