Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்யும் அதர்வா

11 ஜன, 2017 - 13:44 IST
எழுத்தின் அளவு:
atharva-recommends-priya-anand-movies

அதர்வா நடித்த படங்களில் ஈட்டி தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை. ஆனாலும், தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கமிட் பண்ணி வைத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னேஷ் இயக்கி வரும் 'ஒத்தைக் ஒத்த' என்ற படமும் அவற்றில் ஒன்று.


சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' படத்தை தயாரித்த 'விஷன் மீடியா' நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் அதர்வாவின் அப்பாவாக பிரசாந்தின் அப்பா தியாகராஜன் நடிக்கிறார். 'சித்திரம் பேசுதடி' ஹீரோ நரேன் வில்லனாக நடிக்கிறார். மாணவர்களின் கல்லுரி வாழக்கை, காதல், தங்களுக்குள் யார் பெரியவன் என்பதில் மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் ஆகியவற்றை மையமாக வைத்தே 'ஒத்தைக்கு ஒத்த' படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.


இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்களுள் ஒருவராக நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்த 'அச்சமின்றி' படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக வாய்பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார்.'ஒத்தைக் ஒத்த' படத்திலோ கல்லூரி மாணவியாக அதர்வாவின் காதலியாக நடிக்கிறாராம் வித்யா பிரதீப். இந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் இன்னொரு கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதர்வா தரப்பிலிருந்து ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்வதாக படக்குழுவினர் மத்தியில் தகவல் அடிபடுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in