Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைரவா தலைப்புக்கு தடைகேட்டு வழக்கு

11 ஜன, 2017 - 13:34 IST
எழுத்தின் அளவு:
will-the-movie-bhairava-hit-the-screens-on-pongal-?

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படம் நாளை வெளிவருகிறது. இதனை பரதன் இயக்கி உள்ளார். விஜயா புரொடக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி தயாரித்துள்ளனர். படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்தின் தலைப்பு என்னுடையது அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ஜி.பொருள்தாஸ் என்பவர் வழக்கு தொர்ந்துள்ளார். சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


நாய் ஒன்றின் வீரச்செயல் மற்றும் சாதனையை அடிப்படையாக கொண்ட ஒரு கதையை எழுதி அதனை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்து, ஆரம்பக்கட்ட பணிகளை எல்லாம் செய்துள்ளேன். இந்த கதைக்கு 'பைரவா' என்ற தலைப்பும் வைத்தேன். தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டு என்ற அமைப்பில் உறுப்பினராக நான் இருப்பதால், அந்த அமைப்பிடம் 'பைரவா' தலைப்பை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி பதிவு செய்தேன். இந்த பதிவை புதுப்பிக்கவும் செய்துள்ளேன்.


இந்த நிலையில், நடிகர் விஜய், கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்துக்கு 'பைரவா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக பைரவா என்ற தலைப்பை பதிவு செய்துள்ள விவரங்களை எடுத்துக்கூறி, அந்த தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி விஜயா புரொடக்ஷன் நிறுவனதுக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னுடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பதில் நோட்டீசு அனுப்பியுள்ளனர். எனவே, 'பைரவா' என்ற தலைப்பை பயன்படுத்த தடைவிதிக்கவேண்டும்.


இவ்வாறு மனுவில் பொருள்தாஸ் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 'மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எதிர் தரப்பின் கருத்தை கேட்காமல், இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். இதுகுறித்து எதிர்மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


Advertisement
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடைகோரி வழக்குதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு ... ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்யும் அதர்வா ப்ரியா ஆனந்தை சிபாரிசு செய்யும் ...


வாசகர் கருத்து (4)

YesJay - Chennai,இந்தியா
12 ஜன, 2017 - 02:17 Report Abuse
YesJay Just a form of extortion. Didnt he know that a movie is being made for the past 6 months? Title was announced atleast 3 or 4 months earlier. The court should penalise these kind of extortionists.
Rate this:
saravanan - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
11 ஜன, 2017 - 19:59 Report Abuse
saravanan இந்த தலைப்பு ராகவா லாரன்சிடம் இருந்து பெறப்பட்டது
Rate this:
11 ஜன, 2017 - 16:00 Report Abuse
suragopalan இந்த மொக்கை மாமா விஜய் எப்பொதுமே அடுத்தவன் உழைப்பை திருடி பணம் சம்பாதிப்பா
Rate this:
cp -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜன, 2017 - 13:46 Report Abuse
cp டேய்.. 10 மாசமா படம் எடுக்கறாங்க அப்ப தெரியாதா.. கல்லா கட்ட இதெல்லாம் ஒரு வழி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in