Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொதுவாக எம்மனசு தங்கம் படப்பிடிப்பு இன்று இரவோடு முடிகிறது!

11 ஜன, 2017 - 09:16 IST
எழுத்தின் அளவு:
pothuvaga-en-manasu-thangam-movie-shoot-to-complete-today-night

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்து வரும் படம் பொதுவாக எம்மனசு தங்கம். அவருடன் பார்த்திபன், சூரி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது. கூடவே இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளிலும் முன்பை விட அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளாராம் உதயநிதி. மேலும், அரசியல் தாதாவாக நடித்துள்ள பார்த்திபனுக்கும், உதயநிதிக்குமிடையே நடக்கும் பிரச்சினை தான் இப்படமாம்.


அதோடு, அரசியல்வாதியான பார்த்திபனை தோற்கடிக்க உதயநிதி தேர்தலில் போட்டியிடுவதும். அவருக்கு இணையாக வீதிகளில் கட்அவுட்கள் வைத்து அமர்க்களப்படுத்துவதும் இந்த படத்தில் அரங்கேறியுள்ளதாம். கூடவே உதயநியின் நண்பனாக நடித்துள்ள சூரி, இதற்கு முன்பு உதயநிதி படங்களில் சந்தானம் கலக்கியதைப்போன்று காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். இந்த படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் மதுரை, தேனி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், இன்று இரவோடு படப்பிடிப்பு நிறைவு பெறுகிறதாம். அதனால் பூசணிக்காய் உடைத்த கையோடு நாளை யூனிட் சென்னை திரும்புகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in