அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு அதையடுத்து பல படங்களில் அம்மா வேடங்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக, உன்னோடு கா, மீன்குழம்பும் மண்பானையும், கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்த ஊர்வசி தற்போது அம்மா வேடங்களில் பிசியாகி விட்டார். குறிப்பாக, சிவலிங்கா, மகளிர் மட்டும் படங்களில் அவரது கேரக்டர்கள் பேசப்படுமாம்.
அந்த வகையில், செண்டிமென்டான அம்மாவாக நடித்திருந்தபோதும், காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்துள்ளாராம் ஊர்வசி. இந்த படங்கள் திரைக்கு வரும்போது ஊர்வசியின் மார்க்கெட் எகிறி விடும் என்கிறார்கள். இதனால் அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா உள்ளிட்ட சில அம்மா நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.