Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பில் தகராறு

10 ஜன, 2017 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Problem-at-thaana-serntha-koottam-shooting

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம்-3 இம்மாதம் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து தற்போது தன்னுடைய தயாரிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை நானும் ரௌடிதான் பட இயக்குநரும், நயன்தாராவின் வருங்கால கணவருமான(?) விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.


சென்னை, கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வருகிறது. சூர்யா, கீர்த்திசுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ள தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவருமே கறுப்புசட்டை அணிந்து காணப்படுகின்றனர். அதே கறுப்பு சட்டையில் சூர்யாவின் பவுன்சர்களும் ஊடுருவியுள்ளனர்.


படப்பிடிப்பு தொடங்கிய முதல்நாளான நேற்று முதலே படக்குழுவினர் அழிச்சாட்டியம் செய்துள்ளனர். அதாவது, அங்கு குடியிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு இடையூறாக, மக்கள் வழக்கமாக பயன்படுத்தும் பாதையை பயன்படுத்தவிடாமல் தடுப்புகளை அமைத்துள்ளனர். இது பாரதிதாசன் காலனியில் குடியிருப்பவர்களை அவதிக்குள்ளாகியது மட்டுமல்ல அவர்களை கடும் கோபத்துக்கும் ஆளாக்கிவிட்டது. இங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in