அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் கூட்டம் ஏராளம். பவன் கல்யாணுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அவர்கள் தரும் வரவேற்பும் தனிரகமானது தான். அந்தவகையில் ஒக்க மனசு படத்தின் பாடல்கள் வெளியீட்டில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் பவன் கல்யாணுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது. ஆனால் அப்போதே தனது கருத்து குறித்து அல்லு அர்ஜூன் விளக்கமளித்து விட்டார். இருப்பினும் பவன் கல்யாண் ரசிகர்கள் இவ்விவகாரத்தை விட்டது போல்
தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவின் கைதி நம்பர் 150 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூனை பவன் கல்யாண் ரசிகர்கள் முற்றுகையிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகின்றது. விழாவை முடித்துவிட்டு காரை நோக்கி நடக்கும் அல்லு அர்ஜூனை பவன் கல்யாண் எனும் கோஷத்துடன் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதும் பின்னர் பாதுகாவலர்கள் உதவியுடன் அல்லு அர்ஜூன் சிரித்தபடி காருக்குள் செல்வதும் விடியோவில் பதிவாகியுள்ளது.