ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை தானே விரும்பி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த 'ரதி நிர்வேதம்' சமீபத்தில் வெளியான 'களிமண்ணு' ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன். களிமண்ணு படத்திற்காக, ஸ்வேதாமேனன் தனது நிஜமான பிரசவத்தையே படமாக சம்மதித்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார். இதற்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்துக்கு தடை கேட்டு போராட்டம் நடத்திய சம்பவமெல்லாம் கூட நடந்தது.
ஆனால் அடுத்தடுத்து அதேமாதிரி தைரியமான பெண்மணி கேரக்டர்களாகவே அவர்பை தேடிவர, நொந்துபோன ஸ்வேதா மேனன், தயவு செய்து தைரியமான பெண்மணி கேரக்டர் என இனி யாரும் என்னிடம் கதைசொல்லிக்கொண்டு வராதீர்கள்.. நான் ரொம்பவே டயர்ட் ஆகிட்டேன். ஆள விடுங்க சாமி” என கதறாத குறையாக கும்பிடுபோட்டு அனுப்பினார். அதனாலேயே அவரது கேரியரில் கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் படம் ஏதும் ரிலீசாகவில்லை.