பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மாப்பாணர் புரொடக்ஷ்ன் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் யோகராசா சின்னத்தம்பி தயாரிக்கும் படம் யாகன். சஜன் என்ற என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அம்புலி, சென்னை 28 படங்களில் நடித்த அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். டி.மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நிரோ பிரபாகரன் இசை அமைத்துள்ளார். நா.முத்துகுமார், கபிலன், பத்மாவதி, அருண்பாரதி பாடல்களை எழுதியுள்ளனர். புதுமுகம் வினோத் தங்கவேலு இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருவரையருவர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது யாகன். தான் சம்பந்தமேபடாத ஒரு அவமானம் வில்லனுக்கு நிகழ்கிறது. அந்த அவமானத்துக்கு ஹீரோவின் குடும்பமே காரணம் எனப் புரிந்துகொள்ளப்படுவதால் ஹீரோவின் குடும்பம் சிதைந்துபோகிறது. இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்பது கதை.
அதோடு தந்தைக்கும், மகனுக்குமான உறவைச் சொல்கிறோம். அப்பாவும், மகனும் எவ்வளவு அன்னோன்யமாக இருக்கிறார்கள். அப்பாவும் மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறோம். அப்பாவாக இயக்குனர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடித்துள்ளார். என்றார் இயக்குனர் வினோத் தங்கவேலு.