Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஓம் நமோ வெங்கடேஷாயா பாடல்கள் வெளியீடு

10 ஜன, 2017 - 09:30 IST
எழுத்தின் அளவு:
om-namo-narayana-movie-audio-launched

தெலுங்கு திரை உலகின் பிரபல பக்தி பட இயக்குனர் கே.எஸ்.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்துள்ள பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஜனவரி 9) ஐதராபாத்தில் நடைபெற்றது. நாகார்ஜூனா, அனுஷ்கா, ப்ரக்யா ஜெய்ஸ்வால், சௌரப் ஜெயின் என இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா, அகில், தொழிட் நுட்ப கலைஞர்கள் மற்றும் டோலிவுட்டின் முக்கிய பிரமுகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


விழாவில் பேசிய நாகார்ஜூனா, இப்படத்தில் பணியாற்றிய அணைவருமே எனக்கு விருப்பத்திற்குரியவர்கள். இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் பாடல்களை கேட்கும் போது கண்ணீர் வருகின்றது. இப்படமே இயக்குனர் ராகவேந்திர ராவ்வின் இறுதிப்படமாக இருக்கும் என இயக்குனர் என்னிடம் கூறினார். ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படம் கண்டிப்பாக கிளாசிக் படங்களின் வரிசையில் இடம்பெறும் என்றும் நாகார்ஜூனா தெரிவித்தார்.


ஹிந்தி நடிகர் சௌரப் ஜெயின் பெருமாள் வேடமேற்று நடித்துள்ள இப்படத்தில் பெருமாள் பக்தரான ஹாத்தி ராம் பாபா வேடத்தில் நாகார்ஜூனா நடித்துள்ளார். கிருஷ்ணம்மா எனும் பெருமாள் பக்தை வேடத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டி இப்படத்தை பெரும்பொருட் செலவில் தயாரித்துள்ளார். இன்று வெளிவந்துள்ள ஓம் நமோ வெங்கடேஷ்யா படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. டிரைலரில் பின்னணி இசையும் விஷுவல் எஃபெக்ட்ஸும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்துள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in