Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு தொடங்கியது! நயன்தாரா வேடத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார்!!

10 ஜன, 2017 - 09:15 IST
எழுத்தின் அளவு:
dhruva-natchathiram-movie-shoot-is-going-on-im-in--coonoor

விக்ரம் நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் விக்ரம் இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார். அதன்காரணமாகதான் ஹரி, விஜய சந்தர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தபோதும் இந்த படத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார் விக்ரம். மேலும், இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக எப்படியேனும் நயன்தாராவை நடிக்க வைத்து விட வேண்டும் என்பது கெளதம்மேனனின் விருப்பமாக இருந்தது.


அதனால், தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், தற்போது பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் நடிக்க ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் அவர் கேட்ட தொகையை கொடுத்தால் பட்ஜெட் தாங்காது என்று தயாரிப்பு தரப்பு கூறுகிறதாம். அதனால், ஜனவரி 2-ந்தேதியே குன்னூரில் துருவ நட் சத்திரம் படப்பிடிப்பை நடத்தயிருந்த கெளதம்மேனன், தொடர்ந்து நயன்தாராவின் சம்பளத்தை குறைக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியும் பலன் கிடைக்க வில்லை. அதனால் இப்போது நயன்தாராவை மறந்து விட்டு மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் அதிதி ராவ் ஹைதரியை ஒப்பந்தம் செய்துள்ளார் கெளதம்மேனன்.


இதையடுத்து நயன்தாராவுக்காக ஒரு வாரமாக படப்பிடிப்பை நடத்தாமல் தாமதம் செய்து வந்த கெளதம்மேனன், நேற்று முதல் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை குன்னூரில் தொடங்கி விட்டார். தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் விக்ரமுடன் அதிதிராவ் ஹைதரி நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in