ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வாதி அதன்பிறகு அவர் நடித்த போராளி படத்திலும் நடித்தார். அதேபோல், சுந்தரபாண்டியனில் நடித்த லட்சுமிமேனன் குட்டிப்புலியிலும் நடித்தார். வெற்றி வேலில் நடித்த நிகிலா விமல் கிடாரியிலும் நடித்தார். ஆக, இந்த மூன்று நடிகைகளுமே சசிகுமாருடன் தலா இரண்டு படங்களில் நடித்து விட்டனர். ஆனால் இப்படி தன்னுடன் இரண்டு படங்களில் நடிகைகளுக்கு சான்ஸ் கொடுக்கும் சசிகுமார் பின்னர் அந்த நடிகைகளுக்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார்.
இதனால், அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து விட்ட நடிகை கள் மீண்டும் நடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை. ஆனால் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருப்பவர்கள் தங்களுக்கு இன்னொரு படவாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர். அதன்காரணமாக, பலே வெள்ளையத்தேவா படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்க சசிகுமார் தயாராகிக்கொண்டிருப்பதை அறிந்து, அவருடன் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் மியா ஜார்ஜ், தன்யா உள்ளிட்ட சில நடிகைகள் இன்னொரு படத்தை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.