Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோவை சரளா வேடத்தில் நடிக்கும் மஞ்சு!

10 ஜன, 2017 - 08:10 IST
எழுத்தின் அளவு:
manju-to-replace-kovai-sarala-in-the-next-movies

ஆடுகளம், மாற்றான் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் மஞ்சு. தற்போது ஆயுதம், வெகுளி, நகர்ப்புறம், ஆளில்லாத ஊரில் அண்ணன் தான் எம்எல்ஏ, தலையாட்டி பொம்மைகள், திருவாசகமும் தேன்மொழியும் என பல படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். மேலும், கோவை சரளா நடிக்கயிருந்த ஒரு வேடம் தனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுவதாக சொல்கிறார்.


அதுகுறித்து மஞ்சு கூறும்போது, நான் இதுவரை அக்கா, அண்ணி, ஆசிரியை, நகைச்சுவை, வில்லி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். தற்போது வெகுளி என்ற படத்தில் யோகா டீச்சராக நடிக்கிறேன். அந்த கேரக்டருக்கேற்ப ஓரளவு கிளாமராகவும் நடிக்கிறேன். மேலும், ஆயுதம் என்றொரு படத்தில் கோவை சரளா நடிக்கயிருந்த வேடத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த ஹாரர் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறேன். என்னை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. என்னால் கோவைசரளா மாதிரி நடிக்க முடியாது என்றாலும், குறையில்லாத அளவுக்கு நடித்து வருகிறேன். அதற்கு ஸ்பாட்டில் கைதட்டலும் கிடைத்து வருகிறது.


மேலும், நதியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்த அவர்தான் எனது ரோல் மாடல். அதனால் எதிர்காலத்தில் நதியா நடித்து வருவது போன்று அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிப்பேன் என்கிறார் மஞ்சு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in