Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பட்டையக் கிளப்புமா 'பைரவா' ?

09 ஜன, 2017 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Did-Bairavaa-will-get-box-office-collection.?

2017ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெளியீடாக 'பைரவா' படம் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளது. பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே படத்தை வெளியிட்டு 5 நாட்களில் படத்தின் மொத்த வசூலையும் அள்ள திட்டமிட்டுள்ளார்கள். விஜய் படம் என்றாலே முதல் நாளில் எப்போதுமே சரியான ஓபனிங் இருக்கும். அதனால்தான் இரண்டு நாட்கள் முன்னதாக படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை முதல் இரண்டு நாட்களில் படத்தைப் பார்க்க வழி செய்துள்ளார்களாம்.


சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற ரசிகர்கள் படத்தைப் பார்க்க வசதி செய்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 450 தியேட்டர்களில் 'பைரவா' படம் வெளியாக உள்ளது. சிறிய ஊர்களில் கூட படத்தை வெளியிட உள்ளார்கள். அதனால், முதல் 5 நாட்களிலேயே அதிகமான பேர் படத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். விஜய்யின் முந்தைய படங்கள் முதல் சில நாட்களில் சராசரியாக 11 கோடி ரூபாய் வரை வசூலித்துவிடும். மேலும், இந்தப் படத்தை உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியிட உள்ளதால் வெளிநாட்டு வசூலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் இருக்கும் என்கிறார்கள்.


எப்படியும் முதல் 5 நாட்கள் வசூல் சராசரியாக ஒரு நாளைக்கு 15 கோடி வந்தால் கூட 5 நாட்களில் 75 கோடி ரூபாய் வரை வசூலிக்க முடியும் என்கிறார்கள். இந்தக் கணக்கு எப்படியும் ஏமாற்ற வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டிலும் சொல்கிறார்கள். இப்படி ஒரு வசூல் வந்தால் விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே 'பைரவா' படத்தின் வசூல் புதிய சாதனையைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in