'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
அந்தக்காலத்து ராமராஜனைப்போல் 2 மாதத்துக்கு ஒரு படம் என நடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்தை அடுத்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 'விக்ரம் வேதா' என்ற படத்தில் நடித்து வந்தார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.
ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பெயர் சூட்டப்படாமலே படத்துக்கு பூஜை போட்டனர். தற்போது இப்படத்துக்கு 'கருப்பன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க இருந்தார். அவருக்கு பதிலாக இப்போது விஜய்சேதுபதியுடன் 'றெக்க'யில் கதாநாயகியாக நடித்த லட்சுமி மேனன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களில் வருகிற 11-ஆம் தேதி துவங்குகிறது.