தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வீரம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே அப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு படத்தின் தலைப்பையும் அறிவித்தனர். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த என்னை அறிந்தால், வேதாளம் படங்களின் டைட்டில் கிட்டத் தட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இதில் வேதாளம் படத்தின் டைட்டீல் அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பின் னர் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐதராபாத் என நடைபெற்று வரும் நிலையில், தற்போது 75 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள் ளது. மேலும், இந்த படம் குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடாமல் வைத்திருக்கும் நிலையில், பொங்கலுக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது குடியரசு தினத்தன்று தல 57வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.