'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுந்தரம், ராஜூசுந்தரம், பிரபுதேவா ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டு, சுமார் 60 படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக ஒர்க் பண்ணியவர் ரமேஷ் கமல். இவர், தமிழ் சினிமா நடிகர்களின் விஜய்தான் சிறப்பாக நடனமாடக்கூடியவர் என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், எல்லா நடன மாஸ்டர்களையும் போலவே, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைக்க வேண்டும் என்பதுதான் எனக்கும் ஆசையாக உள்ளது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதேசமயம், ராஜூசுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களிடம் உதவி நடன மாஸ்டராக பணியாற்றியபோது விஜய், அஜீத் என எல்லா முன்னணி நடிகர்களிடமும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். குறிப்பாக, விஜய் நடித்த குஷி, துள்ளாத மனமும் துள்ளும், யூத், பத்ரி என 20 படங்களுக்குமேல் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில், எந்த மாதிரியான நடன அசைவுகள் கொடுத்தாலும் ஆடக்கூடியவர் விஜய். இந்த மாதிரியெல்லாம் என்னால் ஆட முடியாது என்று அவர் சொன்னதே இல்லை. எந்த மாதிரி மூவ்மெண்ட் கொடுத்தாலும் சிறிது நேரம் நின்று பார்ப்பவர், மறுநிமிடமே அப்படியே ஆடிக்காட்டுவார். தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக்கூடிய ஹீரோ என்றால் அவரைத்தான் சொல் வேன். அதற்காக மற்ற நடிகர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. அஜீத், சூர்யா என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சிறப்பாகவே நடனமாடுகிறார்கள்.
மேலும், நான் சினிமாவில் பிசியாக நடனம் அமைத்து வந்தபோதும், நாட்டியாலயா என்றொரு நடனப்பள்ளியை நடத்தி வருகிறேன். என்னிடம் நடனம் பயின்று இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்கள். இந்த பள்ளியில் போக், வெஸ்டர்ன், சல்சா உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் பயிற்சி கொடுக்கிறேன். எனது மகன் கமல் இந்த பள்ளிக்கு வரும் நடிகர் நடிகைகளுக்கு நடன பயிற்சி கொடுத்து வருகிறார் என்கிறார் நடன மாஸ்டர் ரமேஷ்கமல்.