Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விக்ரம் வேதா'வை முடித்த விஜய் சேதுபதி

07 ஜன, 2017 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-completed-Vikram-Vedha-movie

2016ம் ஆண்டைப் போலவே 2017ம் ஆண்டிலும் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமை விஜய் சேதுபதிக்குத்தான் கிடைக்கப் போகிறது. இந்த ஆண்டில் இவருடைய முதல் வெளியீடாக பொங்கலுக்கு 'புரியாத புதிர்' வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்த இந்தப் படத்திற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்துள்ளது. இனியும் தள்ளிப் போடாமல் படத்தை வெளியிட்டால் அது படத்திற்கே நல்லது.


“கவண், விக்ரம் வேதா, அநீதிக் கதைகள், 96, கருப்பன்” ஆகிய படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாக்கத்தில் இருக்கும் படங்கள். இவற்றில் 'கவண்' படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கும் 'அநீதிக் கதைகள்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. '96, கருப்பன்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு இனிமேல்தான் ஆரம்பமாக வேண்டும். அறிமுக இயக்குனர் பிரேம் '96' படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க உள்ளார். 'கருப்பன்' படத்தை 'ரேணிகுண்டா' படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்க உள்ளார்.


இதனிடையே, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதபதி மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்திற்கான தன்னுடைய பகுதி படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துவிட்டார். இந்தப் படத்தில் ஒரு தாதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். புதிய ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள முதல் படம் இது.


இந்தப் படங்கள் மட்டுமல்லாது விஜய் சேதபதி நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படம் இன்னும் வெளிவராமல் அப்படியே முடங்கியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமி, இந்தப் படத்தை வெளியிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என படக்குழுவினர்களே வருத்தத்தில் உள்ளார்கள்.


தனுஷுடன் விஜய் சேதுபதி நடிப்பதாகச் சொல்லப்பட்ட 'வட சென்னை' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷே 'வட சென்னை' படத்தை தள்ளி வைத்துவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்தும் போது, மற்ற படங்களில் நடிப்பது பாதிக்கப்படுகிறது என விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்கிறார்கள்.


பொங்கலுக்கு வெளிவரும் 'புரியாத புதிர்' விஜய் சேதுபதியின் வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்குமா ? என்பதுதான் இப்போதைகய எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in