தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித்துடன் நடித்துள்ள எல்லா நடிகைகளுமே அவரை புகழ்ந்து பேசுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் சிலர் அஜித்-விஜய் இருவரைப்பற்றியும் அவர்களுடன் நடித்த நடிகைகளிடம் கருத்து கேட்டு அவர்களை சிக்கலில் மாட்டி விடுவதும், அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், ஒருமுறை அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி, விஜய்யைப்பற்றி எதுவும் சொல்லாமல் விட்ட திரிஷாவை விஜய் ரசிகர்கள் இணையதளங்கள் மூலமாக ஒரு பிடி பிடித்து விட்டனர். இதனால் பின்னர் விஜய்யை பற்றியும் புகழ்ந்து பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திரிஷா.
இந்த நிலையில், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து விட்டு தற்போது அஜித்துடன் அவரது 57வது படத்தில் நடித்து வரும் காஜல்அகர்வாலிடமும் சமீபத்தில் ரசிகர்கள் விஜய், அஜித் பற்றி கருத்து கேட்டுள்ளனர். அப்படி அந்த கேள்விக்கணையை தன்னை நோக்கி வீசியதுமே உசாரான காஜல்அகர்வால், அவர்கள் இரண்டு பேருமே நல்லவர்கள், தலைக்கணம் இல்லாதவர்கள். அவர்களுடன் நடித்தது ரொம்ப நல்ல அனுபவம் என்று பொதுவான ஒரு பதிலை சொல்லி எஸ்கேப்பாகியுள்ளார்.