‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சி.வி.குமாரின் 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிப்பில் கலையரசன் ஹீரோவாக நடிக்கும் படம் அதே கண்கள். இந்தப் படத்தில் நெடுஞ்சாலை பட நாயகி, ஷிவதா கதாநாயகியாக நடிக்கிறார். அவன் இவன் நாயகி ஜனனி அய்யர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். பாலசரவணன் காமெடியனாக நடிக்கிறார்.
'அதே கண்கள்' படத்தின் அனைத்து பணிகளும் கடந்த மாதமே முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வேலைகளை முன்கூட்டியே முடித்தனர். ஆனால் பொங்கல் ரிலீசுக்கு விஜய்யின் பைரவா உள்ளிட்ட படங்கள் வரிசைகட்டிநின்றதால் பிப்ரவரிக்கு வெளியிட தயாராகி வருகிறது. இதனையொட்டி அதே கண்கள் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
காதல், த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த சென்சார், அதே கண்களுக்கு 'யு' சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறது. அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
சி.வி.குமாரின் 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' தயாரித்த பீட்சா படத்தைப் போலவே சின்ன பட்ஜெட்டில் த்ரில்லர் படமாக இதை தயாரித்துள்ளனர்.