தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவன், ஹிந்தி, ஆங்கிலம் என பிறமொழிகளில் பிஸியாக இருந்ததால் சிலகாலம் தமிழ் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. கடந்தாண்டு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானவர், அந்த படம் கொடுத்த ஹிட்டால் இப்போது மீண்டும் பிஸி நடிகராக வலம் வர தொடங்கியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‛விக்ரம் வேதா' படத்தில் நடிக்கிறார். அடுத்தப்படியாக களவாணி, வாகை சூட வா படங்களின் இயக்குநர் சற்குணம் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குழந்தைகளை கவரும் விதமாக இப்படம் உருவாக இருப்பதால் பறவைகள், விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படத்தில் அதிகமாக இடம்பெற உள்ளன. மேலும் இப்படம் தாய்லாந்து மங்கோலியா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் பிரமாண்டமாய் படமாக்கப்பட இருக்கிறது. தற்போது ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்கள். ஆரஞ்சுமிட்டாய், றெக்க படங்களை தயாரித்த ‛காமன் மேன்' கணேஷ் மற்றும் மஞ்சப்பை, டோரா படங்களை தயாரித்த சற்குணம் சினிமாஸின் நந்தகுமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.