பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், தயாரிப்பாளருமான சந்திரஹாசனின் மனைவி கீதாமணி, காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, சேதுப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கீதாமணிக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
கீதாமணியின் உடல், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் சென்னை, பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. சந்திரஹாசன் - கீதாமணி, தம்பதியருக்கு நிர்மல்ஹாசன் என்ற மகனும், அனுஹாசன் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அனுஹாசன், இந்திரா, ஆளவந்தான், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.