இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியில் பிரபுதேவா கடைசியாக இயக்கிய சில படங்கள் வெற்றியை கொடுக்காததால் அவரது கவனம் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி விட்டது. அதோடு, பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள அவர், தேவி படத்தை தயாரித்து நடித்தார். அதையடுத்து போகன், சில சமயங்களில் வினோதன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக மீண்டும் தமிழில் விஷால்-கார்த்தியை வைத்து ஒரு படத்தை பிரபுதேவா இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படம் குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாயகனாக நடித்த தேவி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகிறாராம் பிரபுதேவா. தற்போது அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படம் முதல் பாகத்தைப்போலவே மூன்று மொழிகளிலும் தயாராகிறதா? இல்லை தமிழ், தெலுங்கில் மட்டுமே தயாராகிறதா? என்பது சஸ்பென்சாக உள்ளது.