பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். தற்போது கெளதம் கார்த்தி நடிக் கும் இவன் தந்திரன் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் காமெடி காட்சிகளில் செம கலக்கு கலக்கியிருக்கிறாராம் ஆர்.ஜே. பாலாஜி.
மேலும், உள்குத்து படத்தைத் தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறாராம் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். ஆரம்பத்தில் லவ், ரொமான்ஸ் என்று செல்லும் கதையோட்டம் ஒரு கட்டத்தில் கேங்ஸ்டர் பாணிக்கு மாறி விடு மாம். அந்த காட்சிகளில் அதிரடி வில்லனாக நடித்திருக்கிறாராம் திலீப் சுப்பராயன். அவரே படத்தின் பைட் மாஸ்டர் என்பதால் சண்டை காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். அதன்காரணமாக ரொமான்டிக் நாயகனான கெளதம் கார்த்தி இந்த படத்தில் கிட்டத்தட்ட ஆக்சன் ஹீரோவாகவே உரு வெடுத்துள்ளாராம்.