சித்திக்கை பாராட்டிய பிரகாஷ்ராஜ்..! - prakashraj made a good start in malaiyalam movie
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சித்திக்கை பாராட்டிய பிரகாஷ்ராஜ்..!

05 ஜன, 2017 - 16:18 IST
எழுத்தின் அளவு:
prakashraj-made-a-good-start-in-malaiyalam-movie

நீண்ட நாட்களுக்கு பிறகு 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் நடிப்பதற்காக மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். 'ஆடுபுலியாட்டம்' என்கிற ஹாரர் த்ரில்லரை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இனியா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பிரகாஷ்ராஜும் ஜெயராமும் சரோஜா, பரமசிவம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு போலீஸ் அதிகாரி வேடம்.


பிரகாஷ்ராஜை போலவே முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் சித்திக். பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு தீவிர ரசிகரான சித்திக்கிற்கு அவருடன் நடிப்பதில் அளவுகடந்த சந்தோசம்.. ஆனால் இருவரும் சேர்ந்து நடித்த ஒரு காட்சியில் சித்திக்கின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டாராம் பிரகாஷ்ராஜ். அதுமட்டுமல்ல, அந்தக்காட்சி முடிந்தபிறகு படக்குழுவினருடன் சேர்ந்து கைதட்டி தனது பாராட்டை தெரிவித்த பிரகாஷ்ராஜ், சித்திக்கின் பல படங்களில் அவரது மாறுபட்ட நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும் கூறினாராம்


Advertisement
“பிருத்விராஜைப்போல என்னால் முடியாது” ; மோகன்லால்“பிருத்விராஜைப்போல என்னால் ... தியேட்டர்காரர்கள் பங்கை 30 சதவீதமாக குறையுங்கள்; பிரியதர்ஷன் தியேட்டர்காரர்கள் பங்கை 30 சதவீதமாக ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in