பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகேஷ் பாபு நடித்த ஆகடு, ராம் சரண் நடித்த ப்ரூஸ் லீ போன்ற இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டன. இதனால் முன்னணி நடிகர்களின் நம்பிக்கையை இழந்த ஸ்ரீனு வைட்டாலா தற்போது மிஸ்டர் எனும் படத்தை இயக்கி வருகின்றார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் மிஸ்டர் படத்தில் ஹீப்பா பட்டேல் மற்றும் லாவண்யா திரிபதி என இரு நாயகிகள் நடிக்கின்றார். இப்படத்தின் டிரைலர் புத்தாண்டில் திரைக்கு வந்து 1.3 மில்லியன் வியூவ்ஸை பெற்றுள்ளமை படக்குழுவினர் மத்தியில் குறிப்பாக இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின், சுவிட்சர்லாந்த், ஊட்டி, சிக்மங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்திய படக்குழு தற்போது கேரளாவிற்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்றுள்ளது. ஏப்ரல் 14ல் இப்படத்தை திரைக்கு கொண்டு வர இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.