ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலகளவிலான பாலிவுட் படங்களின் வசூல் சாதனையில் முதல் நான்கு இடங்களில் பிகே, பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான், தூம்- 3 ஆகிய படங்கள் இருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இணைந்திருக்கிறது அமீர்கான் நடித்த தங்கல். நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் 'தங்கல்'. தற்போது நம் நாட்டில் நிலவும் பணப்பிரச்சனைகளையும் தாண்டி தங்கல் படம் வசூலில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வசூல் ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் இரண்டு நாட்களிலேயே இந்தியாவில் மட்டுமே 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த தங்கல் படம், முதல் 3 நாட்களில் 100 கோடியையும், 5 நாட்களில் 150 கோடியையும், 7 நாட்களில் 200 கோடியையும், 10 நாட்களில் 250 கோடியையும் கடந்து வசூல் சாதனை புரிந்ததாக பாலிவுட் விநியோகஸ்தர்கள் சொல்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமே 385 கோடி வசூலையும், 287 கோடி நிகர வசூலையும் குவித்துள்ள 'தங்கல்' படம் வெளிநாடுகளில் இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக இரண்டு வாரத்தில் உலகளவில் 500 கோடியைத் தாண்டி வசூலித்திருக்கும் தங்கல் படம் எதிர்வரும் நாட்களில் வசூலில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது.