பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'இரண்டாவது ரவுண்டில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பார்' என, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை, நடித்தோமா, துட்டு வாங்கினோமா, வீட்டுக்கு போனோமா என, அமைதியாக இருந்த இவர், தற்போது, பெண்ணுரிமை, கனவு, லட்சியம் என, பல்வேறு விஷயங்களை பேசுகிறார். சமீபத்தில் கூட, நடிகையரை பற்றி விமர்சித்த இயக்குனரை, காய்ச்சி எடுத்தார். 'சவால்களை பார்த்து பயந்து ஓட மாட்டேன். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்; அதை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்' என, டுவிட்டரில், அவர் பதிவிடும் கருத்துக்களை பார்த்து, கோடம்பாக்கமே மிரண்டு போயிருக்கிறது.