ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. ஜெயம்ரவி, ஆர்யா நடிக்கிறார்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சதீஷ் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் கலை இயக்குனர், கமலகண்ணன் ஸ்பெஷல் எபெக்டை கவனிக்கிறார்.
சங்கமித்ரா படத்திற்காக ஜெயம்ரவியும், ஆர்யாவும் ஒண்னறை ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. கலை இயக்குனர் சாபுசிரில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படத்திற்கான அரங்கம் அமைத்து வருகிறார்.
இந்நிலையில் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறது. கதைப்படி நடிகர், நடிகைகள் இல்லாத கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் வேலையை கடந்த 6 மாதத்திற்கு முன்பே சுந்தர்.சி. தொடங்கிவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான் ஆகிய நாடுகளில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் இந்தப் படத்தை பாகுபலிக்கு இணையாக தயாரிக்க தயாரிப்பாளர் என்.ராமசாமி முடிவு செய்திருக்கிறார்.