ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பிரபல வட இந்திய சேனல் ஒன்றில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் ‛பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இது 10வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களின் படத்தின் புரொமோஷன்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் தில்வாலே படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், தனது ரயீஸ் படத்தையும் இந்த நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்கிறார். இதற்கான ஷூட்டிங் இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஷாரூக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து ஓரிருநாளில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. ரயீஸ் படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. விரைவில் ஷாரூக், சல்மான் இருவரும் ஒரு விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.