பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அக்மார்க் தமிழ் பொண்ணு. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் இப்போது நல்ல பார்முக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு, வில் அம்பு, நையப்புடை, கண்ணுல காச காட்டப்பா என 3 தமிழ் படங்களும், சித்ரம் பலவச்சித்திரம் என்ற தெலுங்கு படமும் வெளிவந்தது. 2017லும் சாந்தினி தொடர்ந்து பிசியாக இருக்கிறார். இப்போது அவர் கைவசம் 10 படங்கள் இருக்கிறது.
தமிழில் டாலர் தேசம், தாமி, மன்னர் வகையறா, பல்லாண்டு வாழ்க, என்னோடு விளையாடு, நான் அவளை சந்தித்தபோது, கட்டப்பாவ கணோம் படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் அய்ன இஷ்டம் நவ்வு என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் தவிர விஜய்சேதுபதி நடிக்கும் கவண் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.
"2016 முழுக்க நான் பிசியாகத்தான் இருந்தேன். ஓய்வே இல்லாமல் 360 நாளும் படப்பிடிப்பில்தான் இருந்தேன். இந்த ஆண்டு இறுதிவரையும் கால்ஷீட் நிறைந்திருக்கிறது. தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது என் விஷயத்தில் பொய்யாகி போனது. ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி நடிக்கிறேன். சொந்த குரலில் பேசி நடிக்கிறேன். சம்பள விஷயத்தில் கறாரா இருக்க மாட்டேன். எப்போதும் இயக்குனரின் நடிகையாக இருப்பேன். இந்த எளிமைதான் எனக்கு வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது" என்கிறார் சாந்தினி.