Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுவாசிகாவுக்கு அடையாளம் தருவாரா பிரபா

03 ஜன, 2017 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Did-Prabha-will-give-success-to-Swasika

தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையோடு வரும் எல்லா கேரளத்து தேவதைகளும் வெற்றி பெற்று விடுவதில்லை. ஒரு சிலர் வந்த வேகத்தில் ஜெயிக்கிறார்கள், ஒரு சிலர் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்த போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுவாசிகா.


வைகை படத்தில் அறிமுமான சுவாசிகா அதன் பிறகு கோரிப்பாளையம், மைதானம் படங்களில் நடித்தார். சாட்டை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக நடித்தார். சாட்டை சுவாசிகாவுக்கு ஒரு அடையாளம் கொடுத்தாலும் சீனியர் நடிகருடன் நடித்ததால் அடுத்து ஜூனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. அடுத்து அவர் நடித்த பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனது.


தற்போது அவர் நடித்து வரும் பிரபா என்கிற படம்தான் அவரது பெரிய நம்பிக்கை. இது பக்கா ஹீரோயின் சப்ஜெக்ட். மூன்று வயது குழந்தைக்கு அம்மாவாக டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். தன் குழந்தைக்கு வரும் ஒரு பிரச்னையை ஒரு அம்மாவாக எதிர்த்து நின்று எப்படி ஜெயிக்கிறார் என்கிற கதை. விஜயசாந்தி ஸ்டைலில் ஆக்ஷனிலும் இறங்கி அடிக்கிறார். கொஞ்சம் கிளாமர் கலந்தும் நடிக்கிறார். பல ஹீரோயின்கள் நடிக்கத் தயங்கிய கேரக்டரில் துணிச்சலுடன் நடித்து வருகிறார். நந்தன் என்ற புதுமுகம் தயாரித்து, இயக்குகிறார். ஜனனி இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய மற்ற பணிகள் நடந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in