பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆக்டருங்க சங்கத்துலேயும் மனஸ்தாபம் உண்டாகியிருக்காம். ஆரம்பத்தில் கருணையான காமெடியனுக்கு முக்கியத்துவம் தர்றாங்கன்னு பொன்னான வண்ணன் கோவிச்சுக்கிட்டு திரிஞ்சாரு. அதுசரியாகி வந்திருக்கும் நேரத்தில் கொஞ்ச நாளா தலைவருக்கும், செயலாளருக்கும் மனஸ்தாபம் ஆகியிருக்காம். இரண்டு பேருக்கும் இடையில விரிசலை உண்டாக்குறதுக்காகவே தலைவர் மகன் நடிச்ச படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணினாரு தயாரிப்பு தலைவரு. அதுக்கு இப்போ பலன் கிடைச்சிருக்காராம்.
தலைவர் மனைவியை தேர்தல் நிறுத்த ஆக்டருங்க சங்கம் முடிவு பண்ணிச்சாம். "அவுங்க நம்ம சங்கத்துல தலையிட்டப்போ நமக்கு கோபம் வந்துச்சில்ல. இப்போ நாம அவுங்க சங்கத்துல தலையிடறது என்ன நியாயம். என் மனைவி நிக்கமாட்டாங்க எனக்கும் இதுல இண்ட்ரஸ்ட் இல்லே"ன்னு தலைவரு ஸ்டிராங்கா சொல்லிட்டாராம். ஆக்டருங்க தலைவரு தயாரிப்பு தலைவரோட நெருக்கம் காட்டறது பிடிக்காமத்தான் பூ நடிகையை செயலாளர் அறிவித்தாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.