அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மைனா படத்தில் சூடு பிடித்த தம்பி ராமைய்யாவின் மார்க்கெட் இப்போது வரை சூடு குறையாமல் இருக்கிறது. சில படங்களில் காமெடியனாக நடித்தாலும் பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடிக்கும் தம்பி ராமைய்யா, ஒவ்வொரு படத்திலுமே ரசிகர்களின் கைதட்டலை பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இதற்கு முன்பு பெரிதாக கெட்டப் மாற்றி நடிக்காத தம்பி ராமைய்யா இந்த படத்தில் யோகிபாபு போன்று தலைநிறைய முடி வைத்து வெள்ளை வேஷ்டி-கதர் சட்டை அணிந்து நடிக்கிறார். அரசியல் பின்னணி கொண்ட காமெடி கலந்த கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கும் தம்பி ராமைய்யா, சில காட்சிகளில் அரசியல் பஞ்ச் டயலாக்கும் பேசுகிறாராம். அதனால் அவர் தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கும் என்கிறார்கள்.
மேலும், இந்த படத்த அடுத்து வருகிற மார்ச் மாதம் ஒரு படத்தில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார் தம்பி ராமைய்யா. அதற்காக குடும்ப பின்னணி கொண்ட ஒரு கதையை கேட்டு ஓகே பண்ணியுள்ள தம்பி ராமைய்யா, அந்த படத்தில் காமெடி மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் நடிப்பதாக கூறப்படுகிறது.