பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரஜினி நடித்த படிக்காதவன், நான் மகான் அல்ல, தில்லுமுல்லு, பாயும்புலி என பல படங்களில் இளவட்ட ஹீரோக்கள் நடித்துள்ள நிலையில், தற்போது ரஜினி நடித்த வீரா பட டைட்டீலில் கழுகு கிருஷ்ணா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யாமேனன் நடித்துள்ளார். கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், இந்த வீரா படத்திற்கும், ரஜினியின் வீரா படத்திற்கும் கதையில் எந்த சம்பந்தமும் இல்லையாம். அந்த வகையில் கிருஷ்ணா நடித்து வரும் இந்த வீரா படம் வடசென்னை கதையில் உருவாகியிருக்கிறது. வடசென்னை ஏரியாவில் நண்பர்களுடன் சுற்றித்திரியும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இந்த படமாம். இதற்கு முன்பு வடசென்னையை களமாக வைத்து பல கோணங் களில் படங்கள் வந்திருந்தபோதும் இந்த படம் அதில் புதுசாக இருக்குமாம். அதோடு, கழுகுக்குப்பிறகு கிருஷ்ணாவுக்கு இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள். இந்த படத்திற்காக பக்கா வடசென்னை இளைஞனாக மாறியுள்ள கிருஷ்ணா, டப்பிங்கிலும் சென்னை தமிழில் பேசுகிறாராம்.