தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் பரவியிருந்த 6 பேக் கலாச்சாரம் அதன்பிறகு தெற்கு நோக்கி வந்து தென்னிந்திய அளவிலும் பரவியது. சில இளவட்ட ஹீரோக்கள் மாதக்கணக்கில் வாயை வயித்தைக்கட்டி 6 பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்தனர். அப்படி தமிழ் சினிமாவில் சூர்யா, சிம்பு, விஷால், அதர்வா என பல ஹீரோக்கள் சில படங்களில் சிக்ஸ்பேக் உடல்கட்டுடன் நடித்தனர். ஆனால், அதுவும் ஒரு சீசன் போலாகி விட்டது. சமீபகாலமாக யாரும் அந்த உடல்கட்டுக்கு மாறுவதில்லை.
இந்த நிலையில், அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி, அந்த படத்தில் 8 பேக் வைத்து நடித்துள்ளாராம். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை இழுக்க வேண்டும் என்பதற்காக பல மாதங்களாக கடினமான உடற்பயிற்சி செய்து இந்த உடல்கட்டுக்கு மாறி நடித்திருக்கிறாராம். ஒரு சண்டை காட்சியில் அவரது 8 பேக் உடல்கட்டை வெளிப்படுத்தும் வகையில் க்ளோசப் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இதையடுத்து, முதல் படத்திலேயே தனது மகன் கடினமாக உழைத்திருப்பதை தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் தம்பி ராமைய்யா.