'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியதால் அவருக்கு தமிழில் மேற்படி படங்கள் இல்லை. இதனால் பாலிவுட் சென்றவருக்கு எடுத்த எடுப்பிலேயே ஹிருத்திக் ரோஷன் உடன் நடிக்க வாய்ப்பு வந்தது. மொகஞ்சதரோ என்ற சரித்திர படத்தில் நடித்தார். ஆனால் அவரது ராசியோ என்னமோ தெரியவில்லை அந்தப்படமும் தோல்வியை தழுவியது. தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில், நடிகர் சூரஜ் பஞ்சோலியுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். சூரஜ் பஞ்சோலி, பிரபலமான ஹீரோ இல்லை என்பதால் அவருடன் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.